Showing posts with label வே.பார்த்திபன். Show all posts
Showing posts with label வே.பார்த்திபன். Show all posts

Tuesday, 17 February 2026

குடவாயிலார் என்னும் முன்னத்தி ஏர் - வே.பார்த்திபன்

குடவாயில் பாலசுப்ரமணியன்

வரலாறும் கற்பனைகளும்

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், பொன்னியின் செல்வன் நாவல் படித்து முடித்து, ஆர்குட் கம்யூனிட்டி வலைத்தளம் மற்றும் அது தொடர்பான குழுக்களில் கற்பனையில் திரிந்த காலம் அது. ஒருநாள் பொன்னியின் செல்வன் வாசகர்கள் தஞ்சையில் குழுமினோம். அப்போது அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முதுமுனைவர். திரு.குடவாயில்.பாலசுப்ரமணியன் கலந்து கொள்கிறார் என அப்போது தெரிவித்தார்கள், அதற்கு முன் அவரை கேள்விப்பட்டதில்லை, யாரோ ஒருவர் தலைமையேற்கிறார், நாமும் செல்வோம் என்ற அளவிலேயே எனது புரிதல் இருந்தது. கோவிலின் தென்புறவாயிலின் சுற்றுச்சுவர் அருகில் குடவாயில் பேச ஆரம்பித்தார். பேச ஆரம்பித்தார் என்பதனை தாண்டி, பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி முதல் பினாகபாணி வரையிலும் அவர் உடைத்து எறிந்த கற்பனை பாத்திரங்கள் ஏராளம். அவர் பேசப்பேச எது கற்பனை எது வரலாறு என்ற சித்திரம் எங்களுக்குள் இயல்பாக எழுந்து வந்தது. அவரைத்தவிர வேறு யார் அன்று இதை விளக்கியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே. பின்னர் கல்வெட்டுகளிலிருந்து “வல்லவரையன் வந்தியத்தேவன்”, “ஆழ்வார் பராந்தகன் குந்தவை”, “லோகமாதேவி”, “கிருஷ்ணன் ராமன்”, “சிவபாதசேகரன்”, “வாழைப்பழ பிள்ளையார்”, தஞ்சைக்கோவில் கல்லெழுத்து எழுதிய, ‘'ரவிபாளூர்” என அவர் வாசித்து காட்ட, அப்படியொரு பிரமிப்பு.

Tuesday, 27 May 2025

கல்லில் எழுந்த நாயகர்கள்- தாமரைக்கண்ணன் புதுச்சேரி

தில்லை காளி கோவில்லுள்ள அரிகண்ட வீரர்- படம் வே. பார்த்திபன்

தமிழ் பண்பாட்டில், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் நெடிது பேசப்பட்ட ஒரு மரபு நடுகல்லுக்கானது. கல்நாட்டும் மரபு தொல்பழங்காலத்திலிருந்து துவங்குகிறது. வீர கதை மரபு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றது. என் தலைவன் முன்பு வரவேண்டாம் பகைவர்களே அப்படி பகை நின்றவர்கள் எல்லாம் இப்போது நடுகற்களாகி நிற்கிறார்கள் என்கிறது படைச்செருக்கு அதிகாரத்தின் குறள் ஒன்று. ஆரம்ப காலத்தில் குத்துக்கற்களாக இருந்த இந்த ஈமச்சின்னங்கள் கற்களில் எழுத்துப்பொறிப்பு பெற்றன, பின்னர் இறந்த வீரனின் உருவத்தோடு வடிக்கப்பெற்றன. பல அடுக்கு சிற்பங்களாகவும் அழகியல் ரீதியாக இவை வளர்ச்சி பெற்றன.