Showing posts with label கோ. வீரராகவன். Show all posts
Showing posts with label கோ. வீரராகவன். Show all posts

Sunday, 12 January 2025

ஆகமம் என்றால் என்ன? - எஸ்.கே. ராமச்சந்திர ராவ்


‘ஆகமம்’ என்னும் சொல் வழிபாடு சார்ந்த பண்டைய மரபையும், அதன் தத்துவ, உளவியல், சடங்கு மற்றும் நடைமுறை வழக்கம் சார்ந்த அம்சங்களையும் உள்ளடக்கியது. இவை வாய்மொழியாகவும் நூல்களாகவும் நம்மை வந்தடைந்துள்ளன. ஆகமங்கள் அனைத்து வழிபாட்டு முறைகளையும் உள்ளடக்கியது. உருவ வழிபாடு, அருவ வழிபாடு, தனிவழிபாட்டிற்காக ஒருவருடைய வீட்டில் நடக்கும் வழிபாட்டுமுறைகள், கூட்டுவழிபாடாக ஆலயத்தில் நடக்கும் வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றை ஆகமம் வரையறை செய்கிறது. இன்று நிலவும் ஆலய மரபின் அடித்தளத்தை ஆகமங்கள் அமைத்தன. ஆலயங்களின் அமைப்பு, பல்வேறு கட்டடமுறைமைகள், ஆலயங்களில் பின்பற்றவேண்டிய வழக்கங்கள், ஆற்றவேண்டிய சடங்குகள், நிகழவேண்டிய திருவிழாக்கள் என ஆலயங்களுடன் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளையும் ஆகமங்கள் வரையறை செய்கின்றன.