திருஞானசம்பந்தர்
ஆடல் - 4: செவ்வேள் ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்து எம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் அடிகளே
கணநாதர்
திருஞானசம்பந்தருக்கும் சுந்தரருக்கும் இடைப்பட்ட காலத்தில் கணநாதர் என்னும் சிவனடியார் சீர்காழியில் வாழ்ந்தார். பெரியபுராணம் கூறும் அறுபத்திமூன்று நாயன்மார்களுள் இவரும் ஒருவர். கணநாதர் சீர்காழி தோணியப்பர் ஆலயத்திற்கு திருத்தொண்டுகள் செய்து வந்தார். நந்தவனத்தை பராமரிப்பது, இறைவனுக்கு மலர் தொடுத்து அளிப்பது, கோவிலை தூய்மை செய்வது, திருமஞ்சன சடங்குக்கு உதவுதல் போன்ற கோவில்பணிகளுடன் பதிகங்களைப் பாடவும், பதிகங்களை ஏட்டில் இருந்து ஏட்டிற்கு படி எடுக்கவும் செய்தார். அப்பணிகளுக்கு தன்னுடன் சிவனடியார்களையும் ஆட்படுத்தினார். கணநாதர் சீர்காழி தோணியப்பரை வழிபட்டதோடு திருஞானசம்பந்தரையும் நாள்தோறும் மூன்றுபொழுதும் அர்ச்சனை செய்து வழிபட்டார்.
ஆடல் 3 - செவ்வேள் ஆடல்: தாமரைக்கண்ணன், புதுச்சேரி
பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவரான உமாபதி சிவாசாரியார் தான் எழுதிய சேக்கிழார் புராணம் என்னும் நூலின் காப்புச் செய்யுள்களில் ஒன்றில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு சிவனடியார்களை ஒன்றாக இணைத்து வாழ்த்துகிறார்.
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி

