Showing posts with label யோ. ஞான சந்திர ஜாண்சன். Show all posts
Showing posts with label யோ. ஞான சந்திர ஜாண்சன். Show all posts

Tuesday, 11 August 2026

தமிழ் இலக்கியமும் தேவாலய இசையும் - யோ. ஞான சந்திர ஜாண்சன் நேர்காணல்

யோ. ஞான சந்திர ஜாண்சன்

யோ. ஞான சந்திர ஜாண்சன் தமிழ் ஆய்வாளர். தமிழ் கிறிஸ்தவ இலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவர். தமிழ் கிறிஸ்தவ காப்பியங்கள், கிறிஸ்தவ சிற்றிலக்கியங்கள், கிறிஸ்தவ கீர்த்தனைகள் இவற்றை தொகுத்துள்ளார். அச்சேறாத படைப்புகளை பதிப்பித்தல், மீள்பதிப்பு, தொகுப்புப்பணிகள், மொழிபெயர்ப்பு, உரை என்று பல்வேறு தளங்களில் முப்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வேதநாயகம் சாஸ்திரிகள், கால்டுவெல் போன்ற இறைத்தொண்டர்களது வாழ்க்கை வரலாறு குறித்தும் ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார். 

யோ. ஞான சந்திர ஜாண்சன் குமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர். சென்னை கிறிஸ்தவக்கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தந்தை யோவான், தாயார் பரமாயி, மனைவி ஷீபா நேசகுமாரி பள்ளி ஆசிரியை, மகள் கீர்த்தனா கேலப், மகன் இம்மானுவேல் ஜாண்சன். 

கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் - பன்முக நோக்கு - யோ. ஞான சந்திர ஜாண்சன்

St Francis Xavier in South India

இயேசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையரின் வருகையால் கிறித்தவம் தமிழகத்தில் கி.பி. 52 ஆம் ஆண்டு முதல் பரவியது. தோமையருக்குப் பின்னர் பல்வேறு அயல்நாட்டவர்களின் வருகையின் மூலம் கிறித்தவம் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது. அர்மீனியர்களின் வரவால் கிறித்தவம் மேலும் தழைத்தது. 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்குக் கடல் வழி கண்டுபிடித்ததன் மூலம் போர்ச்சுக்கீசியர் தமிழகம் வந்தனர். இதைத் தொடர்ந்து இயேசு சபைத் துறவியர்களின் வருகை அதிகரித்தது. 1541 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் சவேரியார் கோவா வந்திறங்கி, தமிழகப் பகுதிகளில் இறைப்பணியும் சமூகப் பணியும் ஆற்றினார். இவரைத் தொடர்ந்து இறைப்பணியாளர்கள் தமிழகம் வந்து சமயப்பணியாற்றியதுடன் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தனர். அச்சு இயந்திரத்தைக் கொண்டுவந்து, அச்சு எழுத்துக்களை உருவாக்கி, காகிதத் தொழிற்சாலை நிறுவி நூல்கள் பதிப்பித்தனர். பல்வேறு வகையான இலக்கியங்கள் படைத்தும், மொழிபெயர்த்தும், எழுத்துச் சீர்திருத்தம் செய்தும் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டனர்.

பொன்னிறக்கதிர்கள் - கடலூர் சீனு

யோசேப்பு பொன்னிற தானிய மணிகளை சேகரித்தல். ஓவியர் Lawrence Alma-Tadema (1874)

இந்தியப் பண்பாட்டில் 1650 முதல் 1950 வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. யுகசந்தி என்றே சொல்லிவிடலாம். மத சீர்திருத்தம், சமூக சீர்திருத்தம், பழமையை உதறி நவீனம் நோக்கி, காலனி ஆட்சியை உதறி ஜனநாயகம் நோக்கி என சுதந்திர இந்தியாவை உருவாக்கிய அடிப்படை விசைகள் அனைத்தும் ஒருங்கே இந்தியக் களத்தில் தொழிற்பட்ட காலம் அது. அந்த அடிப்படை விசைகளுக்கு சாரம் அளித்தவைகளில் இந்து மெய்ஞான தரப்பின் சொற்கள் அளவுக்கே பிற மெய்ஞான தரப்புகளின் சொற்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக கிறிஸ்துவின் சொற்களுக்கு.

தோமையரிலிருந்து தமிழ்நிலத்திற்கு - ரம்யா

The Incredulity of Saint Thomas by Caravaggio, 1602

”இயேசு மலையின் மீதேறி ஜெபம் செய்தார். விடிந்ததும் தன் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்” என்ற நிகழ்வு மாற்கு, லூக்கா, மத்தேயு என பல சுவிசேஷ நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு எளிமையாகக் கடந்த வரியும் கூட. ஆனால் இலக்கியமும், கலையும் அறிமுகமான பின்னர் முன்பு கண்ட நிகழ்வுகள் பேருருக் கொள்கின்றன. அதன் அர்த்தங்களின் ஆழம் புலப்படுகின்றன. ஒரு சொல்லின் கணம் தாங்க முடியாததாக உள்ளது. பைபிள் படிமங்களாக நம் மனதில் பதியவைக்கப்பட்டவற்றின் அர்த்தத்தை, அழகை இன்னும் ஆழமாகத் தேட ஆரம்பிகிறோம்.

திருமுழுக்கு - ஹெலன் முத்து குமாரன்

The Baptism of Christ by Piero della Francesca, 1439

இருளும் குளிரும் உறைந்துகொண்டிருந்த இரவு அது. ஆற்றாமை பெருகிப்பெருகி வந்தது. அதற்கு முழுதும் என்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டிருந்தேன். விடுதி அறையில் தனிமை சூழ்ந்து கொண்டு என்னை அச்சுறுத்தியது. டவுன் ஷிப்பின் அகன்ற வீதிகள், கண்கூசும் செம்மண் நிலம், அதில் கால்கொண்ட பெரும் மரங்கள், கதிரின் வரவையும் அணைவையும் கூவும் பறவையொலிகள் இவையெல்லாம் என் அறைக்குள் வரவில்லை. அம்மாவின் குரலும் தொடுகையும் இல்லாத நாளை அதுவரை நான் கற்பனை செய்திருக்கவில்லை. தாளமுடியாத கனம் என்னை ஆழ அழுத்திச்சென்றது. எனது அறை வாயில்களற்ற கண்ணாடி குமிழி போல மாறிக்கொண்டிருந்தது. அதன் எதிரொளிப்பில் ஏதேதோ முகங்கள் என்னை வெறித்துப்பார்க்க நான் தன்னுணர்வற்றிருந்தேன். 

சிலுவைப் பாதையின் சாட்சிகள் - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

The Martyrdom of Saint Matthew by Caravaggio, 1599

1

ஒரு இலக்கிய நூல் வரலாற்றில் எப்படி எழுதப்பட்டு, சிதைந்து, மீண்டு, தொகுக்கப்பட்டு நமக்கு இன்று வாசிக்கக் கிடைக்கிறது என்பதைப் படிப்பது, வேகப் புனைவு ஒன்றை வாசிப்பதற்கு நிகரானது. அதில் எழுவது அந்த இலக்கியத்தின் வாயிலாக வெவ்வேறு மனிதர்கள், அவர்கள் சந்தித்த சவால்கள், ஒரு படைப்பிற்காகத் தேடி அலைந்து சென்றவர்களின் கதை. ஒன்றை எழுத வாழ்நாளை அர்ப்பணித்தவர்களின் கதை. அந்நூல் தனிக் கதாபாத்திரமாக உருவெடுத்து அதன் ஆசிரியர்களின் வரலாற்றுச் சாட்சியாகவும், தன் சமூக வரலாற்றின் பிரதிநிதியாகவும் மாறியிருக்கும். நமக்கு இன்று கிடைக்கும் சங்கப் பாடல்கள் தொடங்கி அனைத்து மரபிலக்கியங்களின் கதையும் இதுவே.

ஆதி வார்த்தையின் பரவல் - டி.ஏ. பாரி

The Crucifixion by A.D. Thomas, 1908-1989

காப்பியங்களின் பிரதான பேசுபொருள்களுள் ஒன்றாக என்றுமே இறை உருவகங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஒரு நிலத்தில் புதிதாக அறிமுகமாகும் மதத்தின் வளர்ச்சிப் போக்கில் காப்பியங்கள் உருவாவது என்பது முக்கியமான காலகட்டமாகப் படுகிறது. காப்பியங்கள் உருவாகிவிட்டால் அம்மதம் அப்புதிய நிலத்தில் வேரூன்றி நிலைகொள்ளத் தொடங்கிவிட்டது என புரிந்து கொள்ளலாம். ஏனெனில் அவை சடங்குகளுக்கும் அடையாளங்களுக்கும் அப்பால் மனித மனதுடன் நேரடியாக உரையாடும் கதைகளை கொண்டு வந்து சேர்க்கிறது. பிற கலைகளைகளையும் இணைத்துக் கொண்டு இயல்பாக கலாச்சாரத்தின் பகுதியாகவே மாறிவிடுகிறது. கதைகள் காப்பியங்களின் வழியே தொகுக்கப்பட்டு மீண்டும் கதைகளாக நம்மை வந்து சேர்கின்றன.

வேதநாயகம் சாஸ்திரியார் - கே.ஜே. அசோக்குமார்

Music and Devotion by Angelo da Fonseca, 1902–1967

சாகித்ய அகாதமி நிறுவனம் வெளியிட்ட இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வேதநாயகம் சாஸ்திரி பெயரிலான நூல் ஒன்றுள்ளது. அந்த புத்தகத்தை படித்தபிறகு சாஸ்திரி குறித்து இன்னும் அதிகமாக புரிந்துகொள்ள முடிந்தது. அதுவரை அந்த நூலை எழுதிய ஞானசந்திர ஜாண்சன் குறித்து நான் கேள்விப்படவில்லை. ஞானசந்திர ஜாண்சன் மீண்டும் மீண்டும் வேதநாயகம் சாஸ்திரியாரின் வாழ்க்கை, அவரது கீர்த்தனைகள் அவரது சிற்றிலக்கியங்கள் இவற்றை வெவ்வேறு சமயங்களில் தொகுத்திருக்கிறார். கிருஸ்தவ இலக்கிய முன்னோடியான சாஸ்திரியின் பங்களிப்பு குறித்த முழுமையான பார்வைக்கு நீங்கள் ஜாண்சனைத்தான் நாடவேண்டும். கலையின் ஈர்ப்பு விசித்திரமானது. சாஸ்திரியின் படைப்புகளின் அழகுணர்ச்சியைப் பற்றி அவை எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளுக்குப் பின் மொத்த‌ கிருஸ்தவ இலக்கியங்களை தொகுத்து வெளியிட்டவரான‌ ஞான சந்திர ஜாண்சன் வியந்து பேசுகிறார். இத்தனைக்கும் அவர் குறைந்தது இருநூறு படைப்பாளிகளையாது பதிவு செய்துள்ளார். அவர்களில் வீரமாமுனிவரும், திட்டூர் தேசிகரும், கிருஷ்ணப்பிள்ளையும் அடங்குவர். 

ஊருணி நிறைந்த நீர் - இராச. மணிமேகலை

The Fountain of Life by Cristóbal de Velasco, 1590

"For with you is the fountain of life; in your light we see light." Psalm 36:9 

தமிழ் இலக்கிய வரலாற்றில் கிறித்துவ இலக்கியங்களுக்கென்று ஒரு தனித்த இடம் உண்டு. பள்ளி, கல்லுாரி அளவில் அறிமுகமானவை தேம்பாவணி, இரட்சண்ய யாத்திரிகம், இயேசு காவியம் என்ற கிறித்துவ இலக்கியங்கள் மட்டுமே. இந்நிலையில் தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தூரன் விருது இந்த ஆண்டு யோ. ஞான சந்திர ஜாண்சன் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவரை அறிந்துகொள்ளும்விதமாக மேலும் மேலும் வாசிக்கும்போதுதான் நாமறியாத கிருஸ்தவ இலக்கியங்கள் எவ்வளவு உள்ளன என்பது புரிகிறது. இலக்கிய முன்னோடிகளான வீரமாமுனிவர், இராபர்ட் நொபிலி, சீகன்பால்கு, கால்டுவெல் ஆகியோர் அடித்தளமிட்டுச் சென்ற கிறித்துவ தமிழ் இலக்கியம் மாபெரும் மாளிகையை வளர்ந்திருப்பதை திரு ஜாண்சன் வாயிலாக நாம் முழுமையாக கண்டுமகிழ முடிகிறது.

யோ. ஞான சந்திர ஜாண்சன் நூல்கள் அறிமுகம் - ஏ.பால்பிரபு சாந்தராஜ்

சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழறிஞர்கள் பலர் ஆசிரியர்களாக இருந்து தமிழ் வளர்த்தனர். அந்த வரிசையில் பேராசிரியர் முனைவர் யோ. ஞானசந்திர ஜாண்சன் அவர்களின் இடம் குறிப்பிடத்தக்கது. தற்காலக் கிறித்தவ இலக்கிய வரலாற்றை எழுத முற்படுகிறவர்கள் இவரை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்கிற அளவிற்குப் கிறித்தவ இலக்கியப் பணியில் தடம் பதித்தவர். நூல்கள் வழியாக இவரது ஆளுமையை அறிமுகப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது. இவரது நூல்களை, இவர் எழுதிய நூல்கள், பதிப்பித்த நூல்கள், மொழிபெயர்ப்புகள், உரை எழுதிய நூல்கள் என வகைப்படுத்தலாம். அவ்வப்போது கட்டுரைகளை எழுதி வந்தாலும் 2003-இல் தான் தனது முதல் நூலை வெளியிடுகிறார் ஜாண்சன். 2003க்குப் பின் 2026 வரை 24 நூல்களை வெளியிட்டுள்ளார்.