![]() |
| டுடன்காமுனின் மம்மி வைக்கப்பட்டுள்ள சிற்றாலயத்தை இழுத்துச் செல்லும் பூசகர்கள். டுடன்காமுன் கல்லறை ஓவியம், மன்னர்களின் பள்ளத்தாக்கு, லக்ஸோர். |
மன்னர்களின் பள்ளத்தாக்கிலுள்ள கல்லறைகளில் கிட்டத்தட்ட அனைத்திலுமே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மன்னர்கள் என்றில்லை, மந்திரிகள், தலைமைப் பூசகர்கள், முக்கியப் பிரமுகர்கள் என அனைவரின் கல்லறைகளிலுமே அவரவர் வசதிக்குத் தக்கவாறு ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். மரணத்துக்கு பிந்திய சடங்குகள், மறுமை உலகில் ஆன்மா மேற்கொள்ளும் பயணம், மன்னரின் படையெடுப்புக் காட்சிகள், போர் வெற்றிகள், மாண்டோரின் புத்தகத்திலுள்ள சில பகுதிகள், மம்மியாக்கம் முடிந்து உடலை மரப்பெட்டிக்குள் வைத்துச் செய்யப்படும் சடங்குகள், நிறுத்தி வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு எதிரில் நின்றும் அமர்ந்தும் பெண்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள், சொர்க்கத்தில் மன்னரை எதிர்கொண்டழைத்துச் செல்லும் தெய்வங்கள் - எனப் பலவகையான ஓவியங்கள் அங்கே வரையப்பட்டிருக்கும்.





