Showing posts with label ஆடல். Show all posts
Showing posts with label ஆடல். Show all posts

Tuesday, 27 May 2025

ஆடல் 9, கம்பப்பாடல்கள்: வஜ்ரபாகு - தாமரைக்கண்ணன் புதுச்சேரி



சூரசம்மார நிகழ்வின் ஒரு பகுதியாக நடக்கும் கம்பம் ஏறும் சடங்கு கந்த புராணத்தின் வச்சிரபாகு பாத்திரம் ஒன்றை மையமாக்கி நிகழ்கிறது. வச்சிரபாகு என்னும் அரக்கன் தான் அந்த கம்பம், குறைந்தபட்சம் அறுபதடி உயரம் உள்ள கம்பம். இவன் இராவணனைப்போல பத்துத் தலையும் இருபது கரமும் உடையவன். வச்சிரம்பாகு என்னும் பெயருக்கு வச்சிரம் போன்ற உறுதியான தோள்களை உடையவன் என்று பொருள். 

Monday, 25 November 2024

ஆடல் 8, செவ்வேள் ஆடல்: கம்பப்பாடல்கள் - 2, தாமரைக்கண்ணன் புதுச்சேரி


நெட்டப்பாக்கம் சூரபத்மன்

ஆடல்- கம்பப்பாடல்கள் பகுதி- 1


1.3 சூரசம்காரம் : முத்தியால்பேட்டை

திக்காய கரமலர்கள் எட்டோடு நிலவுமொரு
சித்தேசன் நுதல்விழியில் வருசிறிய பாலனோ

சிற்றாடை யணியுமயில் ஒத்தாடும் இமயமகள்
செப்பாடு முலையில்வரும் அமுத நிகர் வாயனோ

திட்டாண்மை யொடுபகைமை உற்றாரும் உயஅருள்தி
திக்காரன் அமரரெதிர் புகழுமுதல் வீரனோ....

..முட்போலும் எயிறுறுப ணிச்சேனை அடுசிகியில்
மொய்த்தோகை நிழலில்உல கினைவளையும் வேலனோ 

முத்தீனும் வளைபலதெ ருத்தோறும் நனியுலவு
முத்தாலு நகரில்வளர் குமரகுரு நாதனே

  • முத்தியாலுப்பேட்டை முருகப்பெருமான் மீது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய குமருகுருநாதன் திருவகுப்பு 

Sunday, 15 September 2024

ஆடல் 7, செவ்வேள் ஆடல் -கம்பப்பாடல்கள் , தாமரைக்கண்ணன் புதுச்சேரி

குக்கே சுப்ரமண்யர்

சூரசம்கார கூத்து

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் ...... கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் ...... பெருமாளே.

தனது சேனையை விட்டு கடலை தாண்டி சூரன் நகரான மகேந்திரபுரத்தில் தூது சென்று, அசுரர்கள் அஞ்ச போர் புரிந்து சிவந்த கிரணங்களை உடைய சூரியனை ஒத்து கடலிலிருந்து திரும்பி வந்த வீரபாகுவின் ஆவியான முருகா, பொழில் சூழ்ந்த செந்தூரில் உறையும் குமரா

(கொங்கைப் பணையிற் என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

Thursday, 14 March 2024

ஆடல் - 6: செவ்வேள் ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி

சூரசம்மாரக் கூத்து 

தமிழில் “கூத்து” என்னும் பழைய சொல் வெவ்வேறு பொருள்களில் பயன்படுகிறது. துணங்கை, குரவை, வெறியாடல் முதலிய சங்ககால கூத்துக்கள் வழிபாட்டுச் சடங்கு சார்ந்தும், போர் முதலான சூழல்களை சார்ந்தும், விழாக்காலங்களில் ஆடப்பட்டதாகவும் உள்ளது. இவற்றில் நாடகீயமான பகுதிகள் இருக்கலாம், மீளச்செய்யப்படும் செய்கைகள் இருக்கலாம், வேடிக்கை வினோதம் போன்ற கூறுகளை அடக்கிய பாவங்கள் இருக்கலாம் ஆனால் சங்ககால கூத்து, கதைகூறல் மரபுடன் வலுவாகப்பிணைந்த கலைவடிவம்தான் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. எளியமுறையில் இதை இன்றைய செவ்வியல் கலையான பரதநாட்டியத்துடன் ஒப்பிட்டால், பரதத்தின் பல பகுதிகள் கதைகூற முயல்பவை அல்ல என்பதை காணலாம். தில்லானா, வர்ணம் முதலியவை அபிநயத்தை மிகக்குறைவாக எடுத்துக்கொள்பவை, அதற்கு மாறாக பதம் முழுக்கவே உணர்ச்சிகளையும் கதைகூறலையும் சார்ந்திருக்கின்றது.

Saturday, 30 December 2023

ஆடல் - 5: செவ்வேள் ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி


போர் நடனம் 

சங்கம் மருவிய காலம் என்று காப்பியகாலத்தை சொல்கிறோம். தமிழின் ஐந்து பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் பல்வேறு நிகழ்த்துக்கலைகளை பதிவு செய்கிறது எனலாம். அவற்றில் முக்கியமானது மாதவியின் ஆடல் அரங்கேற்றம். புகார் நகரில் மாதவியின் அரங்கேற்றம் நிகழ்கிறது. நடனம் நிகழும் மேடையின் நீளம் அகலம் உயரம் இவை குறிப்பிடப்பட்டுள்ளது, மூன்று வகை திரை (எழினி) விளக்கப்படுகிறது. அரங்கத்தில் நாட்டப்படும் தெய்வம் சொல்லப்படுகிறது. மக்கள் மத்தியில் சூழன்றாடும் வட்ட வடிவ களத்துக்கு மறுதிசையில் அமைவது மேடைக்கலை. துவக்க கால மேடைக்கலைகள் பொதுமக்களுக்காக அன்றி அரசன் முதலிய உயர்குடிக்காக நிகழ்த்தப்பட்டது என்றே கருதவேண்டியுள்ளது. அதனாலேயே அதற்கான இலக்கணம் மிக விரைவில் அமைக்கப்பட்டுள்ளது எனலாம். மாதவி தான்கற்ற நடனநூல் இலக்கணப்படி பழுதின்றி ஆடுகிறாள்.

தமிழில் முதன்முதலில் 'மேடை’ என்னும் அரங்க அமைப்பை பற்றி விரிவாக கூறப்படுவது சிலப்பதிகாரத்தின் இப்பகுதியில்தான். ‘நிகழ்த்துக் கலைகள்’ மேடைக்கு மேல் நிகழ்வது, கீழே நிகழ்வது என்று பிரிந்து விட்டதையும், மேடையிலும் நிகழ்த்துபவர் பார்ப்பவர் இடையேயும் திரைகள் தோன்றியுள்ளதையும் சிலப்பதிகார காலத்தில் பார்க்க முடிகிறது. திருவள்ளுவர் இதே கருத்தில் கூத்தாட்டு அவையை தற்காலிக உறவுக்கு உவமையாக்குகிறார். அதேசமயம் கலை செவ்வியல் என்னும் தன்மை நோக்கி நகரும்தோறும் அதற்கான அங்கீகாரமும் மதிப்பும் அதன்வழி வருவாயும் கிடைப்பதை உறுதிசெய்தது என்பதை மாதவியின் கதையிலே நாம் பார்க்கிறோம். கோவலனுக்கும் கண்ணகிக்கும் தரப்படும் துவக்க மதிப்பீட்டை விட, மாதவியின் சிறப்புகளை விரிவாகவே அடிகள் கூறுகிறார். பொதுமகளிர் மீதிருந்த நீண்டகால தலைவியரின் வெறுப்போடு, இந்த அங்கீகாரத்தின் மீதான பொறாமையும் சமூகத்தில் ஒருசாராரிடம் இருந்திருக்கலாம்.

Sunday, 3 September 2023

ஆடல் - 4: செவ்வேள் ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி


சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மும்
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்து எம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் அடிகளே

 - திருஞானசம்பந்தரின் வடுகூர் தேவாரம் 

கணநாதர்

திருஞானசம்பந்தருக்கும் சுந்தரருக்கும் இடைப்பட்ட காலத்தில் கணநாதர் என்னும் சிவனடியார் சீர்காழியில் வாழ்ந்தார். பெரியபுராணம் கூறும் அறுபத்திமூன்று நாயன்மார்களுள் இவரும் ஒருவர். கணநாதர் சீர்காழி தோணியப்பர் ஆலயத்திற்கு திருத்தொண்டுகள் செய்து வந்தார்.  நந்தவனத்தை பராமரிப்பது, இறைவனுக்கு மலர் தொடுத்து அளிப்பது, கோவிலை தூய்மை செய்வது, திருமஞ்சன சடங்குக்கு உதவுதல் போன்ற  கோவில்பணிகளுடன்  பதிகங்களைப் பாடவும், பதிகங்களை ஏட்டில் இருந்து ஏட்டிற்கு படி எடுக்கவும் செய்தார். அப்பணிகளுக்கு தன்னுடன் சிவனடியார்களையும் ஆட்படுத்தினார். கணநாதர் சீர்காழி தோணியப்பரை வழிபட்டதோடு திருஞானசம்பந்தரையும் நாள்தோறும் மூன்றுபொழுதும் அர்ச்சனை செய்து வழிபட்டார். 

Sunday, 25 June 2023

ஆடல் 3 - செவ்வேள் ஆடல்: தாமரைக்கண்ணன், புதுச்சேரி



பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவரான உமாபதி சிவாசாரியார் தான் எழுதிய சேக்கிழார் புராணம் என்னும் நூலின் காப்புச் செய்யுள்களில் ஒன்றில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு சிவனடியார்களை ஒன்றாக இணைத்து வாழ்த்துகிறார்.

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி

Saturday, 8 April 2023

ஆடல் - 2: செவ்வேள் ஆடல் தாமரைக்கண்ணன், புதுச்சேரி

கோயில் கலை, கோவில் பண்பாடு ஆகியவை பல்லவர்களின் காலத்தில், அவர்களின் கலை ஆர்வத்தால் பெரும் விசையுடன் தமிழகத்தில் வளரத் தொடங்கியவை. கோயில் கட்டிடக்கலை, சிற்பம் ஆகிய துறைகளில் இன்று தனித்து தெரியும் பல்லவர் கலைப்பங்களிப்பு அந்நூற்றாண்டில் பெருவிசையோடு பரவிக்கொண்டிருந்த பக்தி இயக்கத்துடன் இணைந்து வளர்ந்தது. 

படம் 1 - சோழர் கால சோமாஸ்கந்த வார்ப்புரு

Wednesday, 25 January 2023

ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி

"உலகம் யாவையும் தன் உடலாகக் கொண்டவனை, 
கேட்பதனைத்தும் மொழியாக ஈந்தவனை, 
நிலவையும் உடுக்களையும் அணிகளாக்கி நிற்கும், 
நாம் வணங்கும் தூய அறிவே ஆனவனுக்கு,
மங்களம் மங்களம் மங்களம் "
                                                                - நடராஜர் தியான ஸ்லோகம்