Loading Posts...
இரா.நாகசாமி
|
February 17, 2026
ஆசிரியர்கள் பார்வையில் குடவாயில் பாலசுப்ரமணியன்
குடவாயில் பாலு - இரா. நாகசாமி
சோழப் பேரரசர்கள் தஞ்சாவூரைக் கைப்பற்றி அதை ஒரு பெருந்தலைநகராக்கி, சோழ சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கும் முன்னர், இப்பகுதியில் பெரும் தலைநகராகத் திகழ்ந்தது "நந்திபுரம்" என்னும் நகர். சோழப் பேரரசு நிறுவிய பிறகு கூட இரண்டு மூன்று நூற்றாண்டுகள் மிகச் சிறந்த நகராகத் திகழ்ந்தது இவ்வூர். பின்னர் அது இருந்த இடமே தெரியாமல் மறைந்து போயிற்று. ஆதலின் ஆராய்ச்சியாளர்கள் தலைநகராகத் திகழ்ந்த நந்திபுரம் எது?, எங்கிருக்கிறது? என்று ஆய்வு செய்து பழையாறைக்கு அருகில் இப்பொழுது 'நாதன் கோயில்' என்று அழைக்கப்பெறும் ஊர்தான் நந்திபுரம் என்று முடிவுக்கு வந்தனர். அதையே எல்லோரும் இதுகாறும் ஏற்று வந்துள்ளனர்.
