Sunday 5 March 2023

பாஸ்கரனும் தமிழும் - ஐ. ஜோப் தாமஸ்

நானும் பாஸ்கரனும் 1955-ல் பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் மாணவர்களாக இருந்தது முதலே நண்பர்களாக இருந்து வருகிறோம். அதன் பிறகும் 1957-60யில் மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியில் எங்கள் நட்பு தொடர்ந்தது. பட்டபடிப்பிற்கு பிறகு அவருக்கு மெட்ராஸ் ஆவணக் காப்பகத்திலும் எனக்கு அரசு அருங்காட்சியகத்திலும் வேலை அமைந்தது, இரண்டுமே எக்மோரில் இருந்தது. நாங்கள் அப்போது அர்மீனியன் வீதியில் உள்ள கத்தோலிக்க மையத்தில் தங்கியிருந்துகொண்டு வாரயிறுதிகளில் உபரி வருமானத்தின் பொருட்டு தி ஹிந்து மற்றும் தி மெயில் பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் அனுப்புவதற்காக பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி செய்வோம்.

ஜோப் தாமஸும் பாஸ்கரனும். வாஷிங்டன் அருங்காட்சியகத்தில்

நாங்கள் கேமிரா வாங்கியவுடன் கோயில்களையும், வனவிலங்கு சரணாலயத்தில் பறவைகளையும், விலங்குகளையும் படம்பிடிக்க சிறு சிறு பயணங்கள் சென்று வந்தோம். அப்பயணங்கள் நமது காடுகள், ஆறுகள், ஏரிகள், கிராமங்கள் மீதான பாஸ்கரின் ஆர்வத்தை தூண்டிவிட்டன. அவரும் அதுசார்ந்த கட்டுரைகள் எழுதினார். ஐம்பது வருடங்களுக்கு முன்பு இவை நடந்த சமயத்தில் சுற்றுச்சூழல் என்பது பிரபலமான ஒரு  தலைப்பாக இருந்திருக்கவில்லை. அவருடைய அரசுப்பணிக் காலத்தில், அலுவலகத் தேவைகளுக்கு அப்பால் அவருடைய ஆளுகைக்கு கீழ் வரும் பகுதிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். மேல் கீழ் என அனைத்து தரப்பு மக்களிடமும் உரையாடி அதிகம் அறியப்படாத ஆனால் முக்கியமான தரவுகளை சேகரித்தார். பெரும்கல்வியோ பகட்டான பட்டங்களோ இல்லாத ”சாதாரண” மக்களிடமிருந்தே பெரும்பாலும் பயனளிக்கக் கூடிய சரியான தகவல்கள் கிடைக்கப்பெறுவதை உணர்ந்துகொண்ட அவர், அவர்கள் மீது என்றென்றைக்குமான மரியாதையை வளர்த்துக் கொண்டார்.

இந்திய நாயினங்கள். அஞ்சல் தலை.  நான்கு படங்களும் பாஸ்கரன் எடுத்த போட்டோக்கள்

அவரது முன்னெடுப்புகளின் விளைவாய் இந்திய அஞ்சல்துறை கிராமிய கைவினைகள், இந்திய கால்நடைகள், பறவைகள், நாய்கள் போன்ற அதிகம் பொருட்படுத்தப்படாத தலைப்புகளில் தபால்தலை வெளியிட்டது. இந்த தபால்தலைகளுக்கான பெரும்பாலான புகைப்படங்களும் அவர் எடுத்தவை தான்.

பணிஓய்விற்குப் பிறகு, மதிப்புமிக்க அரசு உயர்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அடையாளத்தோடு அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதியிருக்கலாம், ஆனால் சிறிதும் பெரிதுமான சில தமிழ் பதிப்பகங்களில் எழுதுவதையே அவர் தேர்ந்தெடுத்தார்.

மெயில் ரன்னர் போல வேடமிட்ட ஒருவருடன் பாஸ்கரன்

சமகால இந்திய வரலாறு மற்றும் தமிழ் திரைப்படங்கள் குறித்த அவருடைய புத்தகங்கள் அதன் அசல்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ஆய்வுத்தன்மைக்காக நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இருப்பினும் சூழியல் எனும் துறையை தமிழில் விவாதிப்பதற்கான அறிவுச்சூழலை உருவாக்கியதற்கான அவருடைய முன்னெடுப்புகளே பெரும் பங்களிப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தவையாக நான் கருதுகிறேன். 

தமிழில் அத்துறை சார்ந்த இலக்கிய ஆக்கங்களில், ஒன்று ஆங்கில சொற்களை தமிழ் எழுத்துருவில் எழுதுவதையோ அல்லது ஆங்கில, சமஸ்கிருத சொற்களின் நேரடி மொழிபெயர்ப்பையோ பயன்படுத்தி வருவதை கண்டார். அவரோ தமிழின் ஆன்மாவிலிருந்து முளைத்தெழும் சொற்களை கண்டறிந்து பயன்படுத்தவே விரும்பினார். தமிழ் மொழி தமிழர்களின் வாழ்வு சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் வளமான சொற்களஞ்சியம் கொண்டது என்பதை அவர் உள்ளுணர்வு சார்ந்தே அறிந்திருந்தார், ஆனால் எழுத்தாளர்களும் பத்திரிக்கைகளும் அவற்றுக்கு பதிலாக ஆங்கில சொற்களை பயன்படுத்தினர்.

இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்துகொள்ள அவர் தமிழ் இலக்கியத்தை பயின்றார். குறிப்பாக சங்கப் பாடல்கள், திருக்குறள், நாலடியார் ஆகியன அவர் படித்தவற்றுள் சில. அவர் அவற்றின் சொற்புதையலிலிருந்து தமிழ் நிலத்தின் பறவைகள், விலங்குகள், உணவு, விளையாட்டு, சூழியல் மற்றும் பண்பாடு சார்ந்த சொற்களையும் பெயர்களையும் எடுத்து தன்னுடைய எழுத்தில் பயன்படுத்தி அவற்றை உயிர்த்தெழச் செய்தார். ஒரு காலத்தில் மறைந்துவிட்ட அல்லது புதைந்துவிட்ட தமிழ் சொற்கள் அவருடைய எழுத்தில் மீண்டும் உயிர்பெற்றன.

அவர் தமிழில் எழுதும்வரை சூழியல் என்பது ஆங்கிலம் பேசும் உயர்வட்டத்தினர் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து விவாதிக்கும் ஒரு கல்வித்துறை சார்ந்த பேசுபொருளாகவே இருந்து வந்தது. அவர் இந்த ஆதிக்கத்தை உடைத்து அத்துறையை ஜனநாயகப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் தமிழ் பண்பாட்டின் வேறு சில தளங்களிலும் விரிந்துள்ளன. உதாரணமாக உள்நோக்கம் கொண்ட சிலரால் ஜல்லிக்கட்டு ஒரு வன்முறை நிறைந்த போட்டியாக சித்தரிக்கப்பட்ட சமயத்தில், பாஸ்கரனே ஜல்லிக்கட்டு என்பது மக்களுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும் இடையே உள்ள அன்பின் அடையாளமான கொண்டாட்டம் என்பதை நிறுவினார். அவர் அளித்த இந்த பண்பாட்டு பின்புலத்தின் அடிப்படையிலேயே இன்று தமிழ்நாடு முழுக்க உற்சாகமாக ஜல்லிக்கட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

பறவை அவதானிப்பில் மனைவி திலகா மற்றும் நண்பர்களுடன் பாஸ்கரன்

இன்று நாம் தமிழ் நாளிதழ்களை வாசிக்கையில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இல்லாத குறிப்பாக சூழியல் தொடர்பான புதிய வார்த்தைகளை காண முடிகிறது. இவை தமிழர்களிடம் தங்களின் சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வை அதிகரித்துள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரனங்கள் சார்ந்த துறைகளில் அவருடைய எழுத்தின் விளைவாய் இன்று பல தமிழ் அறிஞர்கள் உருவாகி வந்துள்ளனர்.

தமிழ் பண்பாட்டுச் சூழலின் நுட்பங்களை தனித்தமிழ் கொண்டு வெளிப்படுத்த வேண்டுமெனும் தனது லட்சியத்திற்கு பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் பல தடைகளை பாஸ்கரன் எதிர்கொண்டார். பொறுமையோடும் மனவுறுதியோடும் அவர் அத்தடைகளை ஒவ்வொன்றாக களைந்தார். கடந்த ஐம்பது வருடங்களில் அவர் அறிமுகப்படுத்திய சொற்களும் கருத்துருக்களும் நம் வாழ்வில் ஊடுருவி மெதுவாக கலந்துவிட்ட பிறகு அவரது பங்களிப்பு கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் தமிழ் சொற்களஞ்சியத்தை செம்மைபடுத்தியதிலும் இளம் தலைமுறையினரிடம் சூழியல் தொடர்பான விழிப்புணர்வை விதைத்ததிலும் தமிழ் மொழிக்கும் அதன் பண்பாட்டிற்கும் அவருடைய பங்களிப்பானது என்றென்றைக்குமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் மகத்தானதுமாகும்.


ஐ. ஜோப் தாமஸ்

 


தமிழில்: பாரி

ஐ. ஜோப் தாமஸ், வரலாற்று ஆய்வாளர் (1939). திருநெல்வேலி மாவட்டம் நாசரேத்தில் பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுடன் வரலாற்றில் முதுகலை பயின்றார்.  இவருடைய  முக்கியமான நூல்களான தமிழக  ஓவியங்கள் - ஒரு வரலாறு, சோழர் காலச் செப்புப் படிமங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் வெளியாகி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் கொர்னீலியஸ் கிராமத்தில் வசிக்கிறார்.  

*********

A Tribute to Theodore Baskaran

I. Job Thomas

Baskaran and I have been friends since 1955 when were students at St. John’s College, Palayamkottai, after that at Madras Christian College, 1957-60. After graduation, he worked at the Madras Record Office and I, at the Government Museum, both at Egmore. We stayed at the Catholic Center, Armenian Street, and during the weekends would research on various topics to write articles for The Hindu and The Mail to supplement our income.

When we acquired cameras, we would go on short trips to photograph temples, birds, and animals in the wild-life sanctuaries. Those visits stirred Baskar’s interest in our forests, rivers, lakes and villages and he wrote articles on those subjects. That was fifty years ago when environment was not a popular topic. During his Civil Service years, beyond the requirements of his office, he made efforts to learn about the area under his jurisdiction. He conversed with people, high and low and gleaned little-known, yet significant facts. Realizing that useful and correct information often came from “ordinary people,” those who did not receive fancy education or possess pretentious titles, he developed an enduring respect for them.

Because of his initiatives the Indian Postal Service issued stamps on ignored subjects like village crafts, indigenous cattle, birds and dogs. Most the images for those stamps came from his photographs.

After retirement, he could have continued to write in English adding the prefix Retd. to his grand civil service title, but chose to write for Tamil publications with large and small circulations. Though his books on contemporary Indian history and Tamil films have earned a reputation for their originality, authenticity and critical analysis, I feel his lasting contribution is in his efforts to cut a path to make Tamil the intellectual medium in the field of environment. Finding the prevalent literature in Tamil on that field was using either English words in Tamil script, or literal translations of English or Sanskrit words, he strove to find words that sprang from the soul of the Tamils. He knew intuitively that Tamil language has a rich vocabulary relating to the lives and culture of the Tamils, but authors and newspapers have substituted them with English words. To rectify this deficiency he studied Tamil literature, especially the Sangam poems, Tirukkural and Naladiyar to mention a few. He resurrected from them a trove of words and names for the birds, animals, food, entertainment, environment and culture of the Tamils and used them in his writings. Tamil words that once were forgotten or lay dormant found a voice in his writings.

Until he wrote in Tamil, environment remained an academic discipline discussed by the English-speaking elites in air-conditioned rooms. He shattered that monopoly and democratized that discipline. His efforts expanded to other arenas of Tamil culture as well. For example, it was he who dispelled the notion held by a pompous few that Jallikattu was a violent contest. It was Baskaran who established that Jallikattu is indeed a celebration of the bond between people and their animals. It is on that cultural rationale he provided that Jallikattu is now being celebrated enthusiastically throughout Tamil Nadu.  

When we read Tamil newspapers today, we come across words especially relating to environment not in use fifty years ago. This has awakened an awareness among the Tamils of their environment. His writings have also spawned a crop of Tamil scholars and writers in the fields of environment and wildlife.

In his mission to use chaste Tamil to express forcefully the nuances of Tamil culture Baskar faced barriers that were cultural, economic, and systemic. With patience and determination, he dismantled them brick by brick. As the words and concepts he introduced during the last fifty years have seeped so gently into our lives, his contribution can go unnoticed. But, in purifying Tamil vocabulary and in instilling an awareness of environment among the younger generation, his contribution to Tamil language and culture is transformational.

*********

I. Job Thomas, Historian (1939). Born in Nazareth, Tirunelveli District. He did his Masters in History at Chennai Christian College along with writer Theodore Baskaran. His important books like ‘Painting in Tamil Nadu, Chola Bronzes, have been published in English and translated into Tamil. Currently Thomas resides in Cornelius Village, North Carolina, USA.