இணையம் இந்த நூற்றாண்டின் பெரும்வாய்ப்பாக இருக்கிறது. இரண்டாயிரத்துக்கு பின் வந்த இணைய இதழ்கள் தமிழ் இலக்கியத்தை பதிப்பிதழ்களிடம் இருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வனவாக அமைந்தன. இந்த வாய்ப்பின் வழி நிறைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
நேற்றைய சிற்றிதழ்களின் தன்மையைக் கொண்டு இன்று இணைய இதழ்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும் பகுதியாகவும் நவீன இலக்கியம் சார்ந்த கவிதை, சிறுகதை, விமர்சனக்கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கலை, வரலாறு, தத்துவம், பண்பாட்டு ஆய்வுகள் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் அந்த பெரும்பெருக்கில் அவற்றுக்குண்டான முக்கியத்துவம் அடையாமல் போய்விடுகின்றன. அவற்றை மட்டும் பேசக்கூடிய ஒரு இணையதளம் கொண்டுவரும் எண்ணத்துடன் குருகு என்னும் இந்த இணைய இதழ் வலைப்பூ வடிவில் துவங்கப்படுகிறது.
இந்த தளத்தில் கலை, தத்துவம், வரலாறு சார்ந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வெளியிடப்படும். எழுபது, எண்பதுகளில் எழுத வந்த எழுத்தாளர்கள் தங்கள் பள்ளிகாலத்திலும் கல்லூரி காலகட்டத்திலும் கையெழுத்துப் பத்திரிக்கைகளை நண்பர்களுடன் நடத்தியதை கேள்விப்பட்டுள்ளோம். காகிதங்களில் தங்கள் கைகளாலேயே எழுதி அதை கைப்பிரதிகள் எடுத்து நண்பர்களுக்குள் படித்துக்கொண்டது போலவே எங்களுடைய இந்த முயற்சியும் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை போலவே துவங்குகிறது.
After the year 2000, E-magazines have elevated Tamil literature to the next level from print publications, thanks to the internet. Many young generation authors are publishing their creations through this opportunity.
Kurugu (Bittern) is a weightless bird referenced in Tamil Sangam literature. This shy and elusive bird, found near water bodies, has been used as a metaphor or allegory in Tamil literature to express subtle poetic moments. This new initiative, unique among Tamil online publications, is named with the aspiration to be a magazine that can resonate with readers’ sensibilities and yet be light reading.
Kurugu magazine’s theme encompasses the realms of art, history, and philosophy. As a magazine, its primary objective is to continuously discuss and document non-fiction domains. The editorial board of this magazine comprises three youthful modern literature enthusiasts. Kurugu offers insights into the quests of an impartial reader in art, philosophy, and history.
Kurugu, in its year-long continuous publication, regularly presents interviews with personalities spanning diverse fields. It publishes series on science and art. Its content includes articles on religious art and philosophy from Buddhism, Jainism, Vaishnavism, Christianity, and more. Each issue features translations from a variety of languages, and important old articles are republished as soft copies. In-depth essays exploring Southern classical and folk art forms are also published.
Kurugu has never confined itself within narrow boundaries. In addition to the editorial board, 20 volunteers contribute to this magazine. Great authors in modern Tamil literature have written for this magazine. Kurugu is poised to ascend towards the possibility of becoming a world-class platform for non-fiction in the future.